×

பிரான்மலை விவசாயிகள் கவலை விபத்தில் சிக்கும் வாகனஓட்டிகள் திருப்புத்தூரில் நாட்டு வாய்க்கால்கள் சீரமைப்பு பணி துவக்கம்

திருப்புத்தூர், அக். 23: திருப்புத்தூர் பெரிய கண்மாயிலிருந்து நாட்டு வாய்க்கால்கள் மூலம் சீதளி தெப்பக்குளத்திற்குச் செல்லும் வரத்துக் கால்வாய் பணிகளை சீரமைக்க கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவின் பேரில் பணிகள் துவங்கியது.
திருப்புத்தூர் பெரியகண்மாய் பெரியமடையிலிருந்து திருத்தளிநாதர் கோயில் சீதளிகுளம் நிரம்புவதற்கான வரத்துக் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. போதிய மழை பெய்யாததால் கண்மாய் வறண்டு இக்குளத்திற்கான வரத்துக் கால்வாய் மற்றும் வயல்களுக்குச் செல்லும் நாட்டு வாய்க்கால்களும் பராமரிப்பின்றி அழிந்தன. ஒரு சில இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு கால்வாய் தடயமில்லாமல் போனது.
இதனை சமீபத்தில் ஆய்வு செய்த கலெக்டர் ஜெயகாந்தன் சீதளிகுளத்திற்குச் செல்லும் நீர் வழித்தடத்தினை ஆய்வு மேற்கொண்டு நாட்டுவாய்க்கால்களையும், வரத்துக் கால்வாய்களையும் சீரமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து வட்டாட்சியர் தங்கமணி, பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், மற்றும் பொதுப்பணித் துறையினர் இக்கால்வாய்களை சீரமைத்து வருகின்றனர். நிரந்தரமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயாக மாற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை
வைக்கப்பட்டுள்ளது.

Tags : roads ,country ,
× RELATED சாலைகள் மக்களை இணைக்கிறது பாராட்டிய...